கொழும்பில் நிதி மோசடியில் ஈடுபட்ட சீன பெண் கைது

84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைக்காக 84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை பெற்று அதனை மீள வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 52 வயதுடைய சீனப் பெண் என தெரியந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.
(Visited 14 times, 1 visits today)