இலங்கை

போலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீன பெண் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட உரையாடலின் விளைவால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரான பெண்ணை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!