மன்னரின் முடிசூட்டுவிழாவிற்கு வருகை தரும் சீன துணை ஜனாதிபதி; பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு

மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு, சீன துணை ஜனாதிபதி வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது வருகைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் புதிய துணை ஜனாதிபதியாக Han Zheng என்பவர் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த Han Zheng மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு வர இருப்பதாகத் தெரிகிறது.
Han Zheng மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு வருவதற்கு பிரித்தானியாவில் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரான Sir Iain Duncan Smith, இந்த மனிதர் சீன பிரித்தானிய ஒப்பந்தம் என்னும் சர்வதேச ஒப்பந்தத்தை மதிக்காதவர்.அவருடைய பதவிக்காலத்தில்தான் ஜனநாயகம் கோரி அமைதி வழியில் பிரச்சாரம் செய்தவர்களை ஹொங்ஹொங் அதிகாரிகள் கொடுமைப்படுத்தினார்கள் என்று கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு மன்னருடைய முடிசூட்டு விழாவில் இடமளிக்கப்படுவது மோசமானதாகும். ஆகவே, இப்படி ஒரு விடயத்தை அனுமதிக்கவேண்டாம் என நாங்கள் அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.Han Zhengஐ மன்னருடைய முடிசூட்டுவிழாவில் அனுமதிப்பது, ஹொங்ஹொங்கின் சுதந்திரம் விரும்பும் மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளார் Sir Iain Duncan Smith.