ஆசியா

சர்ச்சைக்கு உட்பட்ட ஜப்பானிய எல்லை தீவுகளுக்கு அருகே சீனக் கப்பல்கள்

கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்கு உட்பட்ட எல்லைத் தீவுகளுக்கு அருகே சீனக் கப்பல்கள் செல்வதை ஜப்பானிய அதிகாரிகள் கண்டிருப்பதாக தோக்கியோ கடலோரக் காவற்படை ஞாயிற்றுக்கிழமைய (ஜூன் 22) தெரிவித்தது.

ஜப்பானிய நிர்வாகத்திலுள்ள சென்காக்கூ என்ற பெயருள்ள தீவுகளைச் சீனா டியாவ்யு என அழைக்கிறது. இந்த எல்லைத் தீவு தொடர்பான சர்ச்சை இரண்டு நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது.

ஜப்பானுக்குச் சொந்தமான நீர்ப்பகுதிக்கு அப்பால் 12 நாட்டிக்கல் மைல் அப்பால் தூரம் நீளும் சுற்றுவட்டாரத்தில் சீனக் கடலோரக் காவற்படைக் கப்பல்கள் நான்கு சென்றுகொண்டிருந்ததைக் கண்டதாக ஜப்பான் கூறியது.

கடந்த ஆண்டு, தோக்கியோவின் நிர்வாகத்திலுள்ள தீவுக்கு அருகே சீனக் கப்பல்கள் இதுவரை இல்லாத அளவில் 355 முறை சென்றுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

சீனக் கடலோரக் காவற்படைக் கப்பல் இவ்வாறு அந்த தீவுகள் அருகில் கடந்து செல்வதை ஜப்பானிய அதிகாரிகள் பல முறை கண்டித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று ஜப்பானுடன் அமெரிக்க, ஃபிலிப்பீன்ஸ் காவற்படையினர் இணைந்து ஜப்பானின் தென்மேற்குக் கரையில் பயிற்சி செய்தனர்.

சீனாவுடனான எல்லைச் சர்ச்சையில் ஜப்பான், ஃபிலிப்பீன்சுடனும் அமெரிக்காவுடனும் தனது உறவுகளை ஆழப்படுத்த முற்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஜப்பானும் சீனாவும் தங்களது விமானங்கள் ஒன்றோடு ஒன்று அருகில் பறந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தின.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்