ஆசியா

ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்

இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 4ம் திகதி நடைபெற உள்ளது. இதில், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பின் இந்த அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2020ம் ஆண்டு நடந்த கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்