11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வரும் சீன பிரதமர் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பு.
இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாநாட்டையொட்டி நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)