தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த சீன இராணுவம்

தென்சீனக் கடலில் தன்னைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிலிப்பீன்சுக்குச் சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கம்போல் தென்சீனக் கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) கூறியது.
தென்சீனக் கடலில் பதற்றநிலையை மோசமாக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் நடந்துகொள்ளக்கூடாது என்று சீன ராணுவம் வலியுறுத்தியது.
தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று அது கூறியது.
தென்சீனக் கடலின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளும் தனக்குச் சொந்தமானவை என்று சீனா கூறி வருகிறது.
தென்சீனக் கடல் கப்பல் பாதைகள் மூலம் ஆண்டுக்கு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$3.85 டிரில்லியன்) பெறுமானமுள்ள வர்த்தகம் நடைபெறுகிறது.
தென்சீனக் கடலின் சில பகுதிகளை பிலிப்பீன்ஸ், புருணை, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.