தைவானின் மீன்பிடிக் கப்பலை முற்றுகையிட்ட சீன கடற்படையினர்!
சீனாவிற்கும் – தைவானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சீன கடற்படையினரின் தைவானுக்கு சொந்தமான மீன்பிடிக் கப்பலில் வலுக்கட்டாயமாக ஏறியுள்ளனர்.
சீன நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைவான் ஜலசந்தியில் உள்ள கின்மென் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நியைில் தைவான், தைபே தீவுகளைச் சுற்றியுள்ள நீரில் ஒரு விலக்கு மண்டலத்தை உருவாக்கி, சீனக் கப்பல்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது.
பெய்ஜிங் அதிகாரப்பூர்வமாக விலக்கு மண்டலத்தை அங்கீகரிக்கவில்லை, இருப்பினும் சமீப காலம் வரை அது மறைமுகமாக அதன் இருப்பை ஏற்றுக்கொண்டது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தைவானின் ஊடகங்களில், டாஜின்மேன் எண். 88 என அழைக்கப்படும் தைவான் நாட்டுக் கப்பல் ஒன்று, சீனக் கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்களால் திடீரென நெருங்கி வந்ததாகவும், கப்பலை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தைவான் நாட்டு படகு சீனாவின் புஜியானில் உள்ள வெயிடோ ராணுவ துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் அதன் கேப்டன் மற்றும் ஐந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தைவானின் கடலோர காவல்படை அப்பகுதியில் பணிபுரியும் மற்ற மீன்பிடி படகுகளை பாதுகாக்க ரோந்து படகுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.