சீன உயர்மட்ட அதிகாரி வடகொரியாவிற்கு விஜயம்!
சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் வட கொரியாவுடனான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவையும் அதன் நட்பு நாடான அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ள நிலையில், சீன உயரதிகாரியான ஜாவோ லெஜியினின் வடகொரியாவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வடக்கின் பொருளாதார உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவின் மிக முக்கியமான ஆதாரமான சீனா, உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், ஆனால் அரசியல் நிலைமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் ஜாவோ தனது மூன்று நாள் பயணத்தின் முடிவில் கிம்மிடம் கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
75 ஆண்டுகளுக்கு முன்பு இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து, சீனாவும் வட கொரியாவும் “நல்ல நண்பர்களாக செயற்பட்டு வருகின்றன.