11 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்: உறுதிப்படுத்தியது அரசு!
சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி சீன வெளிவிவகார அமைச்சர் தன்னை சந்தித்து பேச்சு நடத்துவார் எனவும் அவர் கூறினார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதியே இலங்கை வருவார் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையிலேயே சரியான திகதி விவரத்தை வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் சீன வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.





