சீன மீன்பிடி கப்பல் விபத்து : 39 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசர்கம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள் 17 இந்தோனேஷியர்கள் 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.
இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். நேற்று 7 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆரம்ப விசாரணைகளின்படி இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக அவுஸ்திரேலிய போக்கவரத்து அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)