விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்த சீன வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் க்ளீன் அண்ட் ஜெர்க் உலக சாதனையை சீன லிஃப்ட் வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.

2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 119 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார்.

தற்போது இந்த சாதனையை 120 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோகிராம் அதிகமாகும்.

ஹுய்ஹுவா ஸ்னாட்ச் முறையில் 95 கிலோ எடையைத் தூக்கி மார்க்கீ நிகழ்வில் முதலிடம் பெற்றார். ஜிஹுய் 211 கிலோ (95 கிலோ+116 கிலோ) இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் 200 கிலோ (88 கிலோ + 112 கிலோ) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ