நிலவின் தொலைதூர பகுதியில் தரையிறங்கிய சீனாவின் ஆளில்லா விண்வெளிக் கலம்
நிலவின் தொலைதூர பகுதியில் சீனாவுக்குச் சொந்தமான ஆளில்லா விண்வெளிக் கலம் ஜூன் 2ஆம் திகதியன்று தரையிறங்கியது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள கற்கள், மண் ஆகியவற்றை பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்வதே இத்திட்டத்தின் இலக்கு என்று சீனாவின் விண்வெளித்துறை தெரிவித்தது.
நீண்டகால விண்வெளிப் பயணங்கள், விண்வெளி முகாம்கள் ஆகியவை நீடித்து நிலைத்திருக்க அமெரிக்கா உட்பட பல நாடுகள் நிலவில் இருக்கும் தாதுப்பொருள்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.இந்த வரிசையில் சீனாவும் சேர்ந்துள்ளது.
நிலவின் தொலைதூர பகுதியில் சீனாவின் சாங்க-6 விண்வெளிக் கலம் தரையிறங்கியிருப்பது இதுவே இரண்டாவது முறை.
நிலவின் தொலைதூர பகுதியில் இதுவரை சீனாவின் விண்வெளிக் கலங்களைத் தவிர வேறு நாடுகளின் விண்வெளிக் கலம் தரையிறங்கியதில்லை.
நிலவின் தொலைதூர பகுதி பூமியை நோக்கி இருக்கவில்லை. எனவே, அங்கு தரையிறங்கும் விண்வெளிக் கலத்துடன் தொடர்பில் இருப்பது சவால்மிக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.