சீனாவின் அச்சுறுத்தல் – பாதுகாப்பு செலவீனத்தை அதிகரித்த தைவான்!
சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய $1.25 டிரில்லியன் ($61.2 பில்லியன்) துணை பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) இன்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை அதன் சொந்த பிரதேசமாகக் கருதும் சீனா, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது உரிமைகோரல்களை உறுதிப்படுத்த இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
இதனை கடுமையான மறுத்துவரும் தைவான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் பாதுகாப்பு கோரியுள்ளது.
இதனால் அண்டை நாடுகளுடனான உறவுகளை சீனா பகைத்துக்கொண்டுள்ளது. உதாரணமாக சமீபத்தில் ஜப்பானுடனான உறவு பலவீனமடைந்ததை சுட்டிக்காட்டலாம்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தைவான் ஜனாதிபதி, T$1.25 டிரில்லியன் தொகுப்பை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்கியுள்ளதாக அறிவித்ததுடன், ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் போது சமரசம் செய்ய முயற்சிப்பது “அடிமைத்தனத்தை” மட்டுமே கொண்டு வந்துள்ளதாக வரலாறு நிரூபித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.




