சீனாவின் அழகான கவர்னர் என அழைக்கப்பட்டவர் 58 ஊழியர்களுடன் தகாத உறவு, ஊழல் வழக்கில் கைது
சீனாவின் முன்னாள் அரசாங்க அதிகாரி ஜாங் யாங் சட்டத்தை மீறியதற்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு மில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
52 வயது யாங், 58 ஆண் அதிகாரிகளுடன் பாலியல் ரீதியாக கள்ள உறவு வைத்திருந்தார் என்றும் அவர் 60 மில்லியன் யுவான் லஞ்சமாகப் பெற்றதாகவும் நீதிமன்றத்தில் நிரூபமானது.
யாங் இதற்கு முன்னர் சீனாவின் தென்மேற்கில் உள்ள சின்னான் பகுதிக்கு ஆளுநராகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரின் அழகைக் கண்டு அவருக்கு ‘அழகிய ஆளுநர்’ என்ற செல்லப் பெயரும் அப்பகுதியில் உண்டு.
இவ்வாண்டு ஜனவரி மாதம் யாங்கின் கள்ள உறவுகள், ஊழல் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியானது. அதில் யாங்கின் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்னரே சீன லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் யாங்கின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அதுவும் ஆவணப் படத்தில் காண்பிக்கப்பட்டது.
தமது தவறுகளுக்கு யாங் வருத்தம் தெரிவித்தார்