சீனாவில் பயன்பாட்டிற்கு வரும் அணுசக்தியால் இயங்கும் அடுத்த தலைமுறைகப்பல்!
சீனாவின் நான்காவது துருவ ஆராய்ச்சி பனிக்கட்டி (icebreaker) கப்பலானது குவாங்சோவின் நான்ஷா மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த கப்பலானது மறுவிநியோகப் பணிகளுக்காக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நியூக்ளியர் ஐஸ் பிரேக்கர்’ என அழைக்கப்படும் இந்த அரசுக்கு சொந்தமான கப்பல், ரஷ்யாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் வடக்கே உள்ள உறைந்த கடல்களை வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் அடுத்த தலைமுறை கப்பல்களில் சமீபத்தியதாகும்.
வட மற்றும் தென் துருவங்களில் உள்ள நாட்டின் ஏழு நிலையங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பொருட்களை நிரப்புவதற்குப் இது உதவியாக இருக்கும்.
இது சைனா ஷிப் பில்டிங் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனுக்கு சொந்தமான நான்ஷாவில் உள்ள CSSC ஆஃப்ஷோர் & மரைன் இன்ஜினியரிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
குளிர்காலத்தில், கப்பல் மஞ்சள் கடல் மற்றும் போஹாய் கடலில் பனியை உடைக்கவும், கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் கடல் பனி அளவீடுகளை நடத்தவும் உதவும் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
33,000 டன் எடையுள்ள அணுசக்தியால் இயங்கும் குறித்த கப்பலானது, அடர்ந்த கடல் பனிக்கட்டிகளை வெட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இரண்டு 25 மெகாவாட் நீர் உலைகள் பொருத்தப்பட்டிருக்கும், இது மகத்தான கப்பல் அதிகபட்சமாக 11.5 நாட் வேகத்தில் அல்லது மணிக்கு 13 மைல்களுக்கு மேல் பயணிக்க அனுமதிக்கும்.
கப்பல் எதற்காக என்று அவர்கள் குறிப்பிடவில்லை என்றாலும், அணுசக்தியால் இயங்கும் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான எதிர்கால முயற்சிகளுக்கு இது ஒரு சோதனைக் களமாக இருக்கும் என்று நிபுணர்கள் ஊகிக்கின்றனர்.