திடீரென காணாமல் போயுள்ள சீன வெளியுறவு அமைச்சர்!! சர்சதேச நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகம்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் திடீரென காணாமல் போனது சர்வதேச சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
கிட்டத்தட்ட 3 வாரங்களாக சீன அரசாங்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் அல்லது இராஜதந்திர சந்திப்பிலும் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்க மாட்டார் என சீனா அறிவித்ததும் இது தொடர்பான விவாதம் எழுந்தது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில், ஆசியான் மாநாட்டில் அந்நாட்டின் உயர்மட்ட ராஜதந்திரியாக கருதப்படும் வாங் யி பங்கேற்றார்.
அதன் பிறகு, பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோரும் சீனாவுக்குச் சென்றனர்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் சார்பில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யி அவர்களை அங்கு சந்தித்தார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய மற்றும் நம்பகமான அதிகாரியாக கருதப்படுகிறார்.
சீன வெளியுறவு அமைச்சர் கிங் கேங் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போற்றப்படும் அதிகாரி என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சராவதற்கு முன், அவர் அமெரிக்காவுக்கான சீன தூதராகவும் பணியாற்றியுள்ளார்.