சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – கடும் கோபத்தில் ஜெர்மனி

சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – கடும் கோபத்தில் ஜெர்மன
தைவான் ஜலசந்திக்கு அருகில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனி குற்றம் சுமத்தியுள்ளது.
அதற்கமைய, பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல் கூறியுள்ளார்.
ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பிணைப்பு விதிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல், உக்ரைனில் ஜப்பானின் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாகக் கூறினார்.
சீனா குறித்தும் அவர் கவலை தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.