ஜப்பானுக்கு பயணம் செய்யும் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
வரவிருக்கும் சந்திர புத்தாண்டு(Lunar New Year) விடுமுறையின் போது ஜப்பானுக்கு(Japan) பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு சீனா(China) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோக்கியோ(Tokyo) மற்றும் பெய்ஜிங்(Beijing) இடையே ராஜதந்திர மோதல் காரணமாக பொது பாதுகாப்பு மோசமடைந்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானில் சில பகுதிகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “சமீபத்தில் ஜப்பானில் சீன குடிமக்களை குறிவைத்து அடிக்கடி சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்கள் சம்பவங்கள் ஏற்படுகின்றன” என்று சீன வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.




