எல்லையில் துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீனா : உச்சம் தொட்ட பதற்ற நிலை!
அமெரிக்கா தைவானுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், தைவான் மற்றும் சீனாவிற்கு இடையிலான பதற்ற நிலை சமீபகாலமாக உச்சம் தொட்டுள்ளது.
இந்நிலையில் சீனா, தைவானைச் சுற்றி இன்று இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேரடி-துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்காக இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ரொக்கெட் படை ஆகியவை அனுப்பப்பட்டுள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
தைவானின் ஜனாதிபதி அலுவலகம் சீனாவின் பயிற்சிகளை சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானவை என்று விமர்சித்துள்ளது.
தைவானை சுற்றி சீன விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கண்டறிந்ததாகவும், நிலைமையைக் கண்காணிக்க தங்கள் சொந்தப் படைகள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைவானைப் பாதுகாக்கவும் “நமது மக்களைப் பாதுகாக்கவும்” அதன் படைகள் “உயர் எச்சரிக்கையுடன்” உள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தற்போது ஆரம்பகட்ட பயிற்சி மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் விரிவான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்துக்கது.





