சந்திரனில் இருந்து சேகரித்த பாறைகளை ஆய்வு செய்ய அமெரிக்காவுடன் கூட்டு சேரும் சீனா!

அமெரிக்கா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் இருந்து சேகரித்த பாறைகளை ஆய்வு செய்ய சீனா அனுமதிக்கும்.
இரு நாடுகளும் கடுமையான வர்த்தகப் போரில் சிக்கியுள்ள நிலையில், இந்த அறிவியல் ஒத்துழைப்பு குறித்த விபரம் வருகிறது.
2020 ஆம் ஆண்டில் சாங்’இ-5 மிஷன் மூலம் சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரிகளை நாசா நிதியுதவியுடன் கூடிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு அணுக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த மாதிரிகள் “அனைத்து மனிதகுலத்திற்கும் பகிரப்பட்ட புதையல்” என்று CNSA தலைவர் ஷான் ஜோங்டே கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)