ஜம்மு-காஷ்மீர் தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் சீனா!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை சீனா கடுமையாக கண்டிக்கிறது என்றும் கூறுகிறது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இந்த தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உறுதியாக எதிர்க்கிறது,” என்று அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களுக்கும், துயரமடைந்த குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சீன அரசாங்கத்தின் சார்பாக அவர் இரங்கல் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான சீனத் தூதரும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.





