அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா
அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் கணக்குகளை சீனாவின் இணைய ஊடுருவிகள் ஊடுருவியிருப்பதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.
உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் வகையில் அமெரிக்க அரசாங்க அமைப்புகளின் மின்னஞ்சல் கணக்குகளில் சீனாவிலிருந்து செயல்படும் ஊடுருவிகள் ஊடுருவியதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்க அமைப்புகள் உட்பட 25 நிறுவனங்களின் மின்னஞ்சல் ஊடுருவப்பட்டதாக Microsoft நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஊடுருவிகள் எதைக் குறிவைத்தனர் என்பது பற்றி அந்நிறுவனம் எதுவும் சொல்லவில்லை.
வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் கண்டறியப்பட்டதும் பாதுகாப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறினார்.
ஊடுருவல் குறித்த விசாரணை தொடர்வதால் விரிவான தகவல்களை வெளியிட முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.