ஆய்வு கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு அனுமதி கோரும் சீனா!
சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் சிக்ஸ்’ இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் சீனா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆய்வுக் கப்பல் வரும் திகதி குறித்து சீன அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் அந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் ‘ஷீ யான் சிக்ஸ்’ வரும் அக்டோபரில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நங்கூரமிடப் போவதாகவும், அந்தக் கப்பல் தென்னிந்தியப் பெருங்கடல் பகுதியில் விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்றும் இந்திய ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், சீன ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் கவலையடைந்துள்ள இந்திய அரசாங்கம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.