அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 84% இலிருந்து 125% உயர்த்திய சீனா!

அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 84% இலிருந்து 125% ஆக உயர்த்தியதாக சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
“அமெரிக்கா தொடர்ந்து அதிக வரிகளை விதித்தாலும், அது இனி பொருளாதார அர்த்தமுள்ளதாக இருக்காது, மேலும் உலகப் பொருளாதார வரலாற்றில் ஒரு நகைச்சுவையாக மாறும்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய மட்டத்தில் வரி விகிதங்களுடன், சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு இனி சந்தை வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் சீனா மீதான வரிகளை தொடர்ந்து அதிகரித்தால், பெய்ஜிங் புறக்கணிக்கும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)