அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிர்வினையாற்ற தயாராகிவரும் சீனா : ஒன்றுக்கூடும் உயர்மட்ட தலைவர்கள்!
சீனா மீது அமெரிக்கா 104 வீத கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், இதற்கு எதிர்வினையாற்ற பெய்ஜிங் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளனர்.
மாநில கவுன்சில், மத்திய வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் பிற அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வட்டாரங்கள் தெரிவித்தன.





