இரட்டைச் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் சீனா!
சீனாவின் கிழக்குக் கடற்பகுதி இரட்டைச் சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது.
இவ்வார இறுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கடுமையான புயலும் கனத்த மழையும் ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது
சீனாவின் தெற்குப் பகுதியிலிருக்கும் ஹைனான் பகுதியில் பெருமழை எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு நாட்டைப் பாதிக்கும் முதல் வெப்பமண்டலச் சூறாவளி இதுவாகும். தைவானின் வடக்குப் பகுதியை இந்த வாரம் கெமி புயல் கடக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
மணிக்குச் சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசும். புதன்கிழமையும் வியாழக்கிழமையும் கெமி புயலை எதிர்நோக்கியிருப்பதாகத் தைவானின் வானிலை நிறுவனம் தெரிவித்தது.
ஷாங்க்சி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வெள்ளிக்கிழமை இரவு பாலம் இடிந்துவிழுந்தது.
இதனால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேரின் வாகனங்கள் ஆற்றில் மூழ்கியபிறகு அவர்களை இன்னமும் காணவில்லை. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.