microwave கற்களை பயன்படுத்தி செயற்கைக் கோள்களை அழிக்க திட்டமிடும் சீனா!
மைக்ரோவேவ் கற்றைகளைப் பயன்படுத்தி ஒரு ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்தி சுற்றுப்பாதையில் எதிரிகளின் செயற்கைக்கோள்களை அழிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இது எதிர்காலத்தில் சாத்தியமான இராணுவ பயன்பாட்டிற்கான சோதனைகளில் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் வார்ஸில் கிரகங்களை அழிக்க லேசர்கள் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்துவதுபோன்று உருவாக்கப்பட்ட புனைக்கதைகளை சீன விஞ்ஞானிகள் தற்போது உண்மையாக்கியுள்ளனர்.
ஆயுதங்கள் வெற்றிகரமாக இருந்தால், கணினிகள், ரேடார்கள் அல்லது செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சீர்குலைக்கும் திறன் உள்ளது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




