டெக் உலகில் அமெரிக்காவை ஓரம் கட்டும் சீனா : அரிய வகை கனிமம் கண்டுபிடிப்பு!

செமிகண்டக்டர், சோலார் பேனல், ஆப்டிகல் பைபர் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமமான’ உயர்-தூய்மை குவார்ட்ஸ்’ கனிமத்தை சீனா தனது நாட்டில் பெரும் அளவில் கண்டுபிடித்திருக்கிறது.
சீனாவின் கண்டுபிடிப்பு, டெக் உலகில் அமெரிக்காவை ஓரம் கட்டும் என்று சொல்லப்படுகிறது.குகைகளில், சுரங்கங்களில் இந்த கனிமம் இயற்கையாக கிடைக்கும். ஆனால், நேற்றுவரை இப்படி ஒரு பொக்கிஷம் அவர்கள் நாட்டில் இருப்பது சீனாவுக்கு தெரியாது.
எனவே, அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஸ்ப்ரூஸ் பைன் சுரங்கத்திலிருந்து தங்களுக்கு தேவையான கனிமத்தை 80% வரை இறக்குமதி செய்து வந்தது.
சீனாவின் இயற்கை வள அமைச்சகம் இந்த கண்டுபிடிப்பு குறித்த வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “நாங்கள் சுமார் 35 மில்லியன் டன் அளவு கொண்ட ‘உயர்-தூய்மை குவார்ட்ஸ்’ கனிமத்தை கண்டுபிடித்திருக்கிறோம்.
இதை புதிய வகை கனிம இனமாக அறிவிக்கிறோம். இதை கொண்டு டெக் துறைக்கு தேவையான பொருட்களை, சொந்த நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறது.