18 செயற்கைக் கோள்களின் தொகுப்பை விண்ணில் செலுத்திய சீனா!
விண்வெளியில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 18 செயற்கைக்கோள்களின் தொகுப்பை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஏவியதாக சீனா அறிவித்துள்ளது.
வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-6 கேரியர் ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ராக்கெட் அதன் முன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அடைந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தேசிய பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக செயற்கைக்கோள்களின் Beidou அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)