mpox பரவலைத் தடுக்க தீவிர முயற்சியில் சீனா
ஆப்பிரிக்காவுக்கு வெளியே mpox தொற்று பரவும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சீனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகை அம்மைத் தொற்று பதிவான நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் பொருள்களையும் சீன அதிகாரிகள் கண்காணிப்பர்.
அந்த நாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் கப்பல்கள், விமானங்கள் போன்றவை சுகாதாரச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்றுக்கான அறிகுறி கொண்டவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால் அதைப் பயணிகள் அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.
தங்களிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதையும் தெரிவிக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களும் கொள்கலன்களும் சுத்தப்படுத்தப்படும்.
mpox அம்மைத் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறைந்தது 6 மாதத்திற்கு நடப்பில் இருக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.