சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா!
சீனா சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது.
இது வரும் காலத்தில் மின்சார தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள்.
இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2023ல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், இப்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது.
நியூக்ளியர் ஃப்யூஷன் போது ஏற்படும் பிளாஸ்மாவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் (10 கோடி செல்சியஸ்) வெப்பநிலை ஏற்படும்.
இருப்பினும், அந்த வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைப்பது சவாலாகவே இருந்து வந்தது. அதைத் தான் இப்போது சீன ஆய்வாளர்கள் தக்கவைத்துள்ளனர். சுமார் 1000 நொடிகள் இந்த வெப்பத்தைத் தக்கவைத்துள்ளது ஒரு மாபெரும் சாதனை என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.