தொடர் மழையால் சிரமங்களை எதிர்நோக்கும் சீனா : 140 மில்லியன் மக்கள் வெளியேற்றம்!
டோக்சுரி சூறாவளி சீனாவை நோக்கி நகர்வதால் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெய்ஜிங்கில், குறைந்தபட்சம் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது, சூறாவளியின் எச்சங்கள் அதிக மழையைக் கொண்டு வருவதாக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள முலிங் நதியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் மழைகாரணமாக சீனாவில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)