திபெத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

சீனாவின் திபெத்தில் உள்ள ஷிகாஸ்டே நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீன மத்திய அரசு வழங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன.
குறித்த பகுதிகளுக்கு நேற்று (07) இரவு நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசிய உணவு மற்றும் சேமிப்பு நிர்வாகத்தால் தொடர்புடைய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதில் ஏறக்குறைய 6,000 கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகள் உள்ளடங்கியதுடன் மேலும் 16,000 நிவாரணப் பொருட்கள் இன்று (08) அந்தப் பகுதிகளை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் தடைபட்ட அனைத்து வீதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 33 times, 1 visits today)