ஆசியா

தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா

தைவானை தனது நாட்டுடன் இணைக்க ராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று திங்கட்கிழமை சீனா மீண்டும் வலியுறுத்திக் கூறியது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தைவானைச் சுற்றி நான்காவது முறையாக பெரிய அளவில் ராணுவப் பயிற்சியை சீனா நடத்தியது.

சீனாவின் நடவடிக்கை பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கடந்த மே மாதம் பதவியேற்ற தைவானிய அதிபர் லாய் சிங் டே, சீனாவுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வருகிறார்.தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்பேன் என்று அவர் கூறியது சீனாவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது.தைவானிய அதிபரை பிரிவினைவாதி என்றும் சீனா விமர்சித்தது.இதற்கிடையே சீனாவின் அண்மைய ராணுவப் பயிற்சி கோபமூட்டும் செயல் என்று கூறியுள்ள தைவான், தேவையான படைகளை அனுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டது.

தைவான் உயர்விழிப்பு நிலையில் இருப்பதாகவும் விரோதியின் நிலைமைக்கு ஏற்ப விமானங்களும் கப்பல்களும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தைவானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

தைவானின் தெற்கே திங்கட்கிழமை (செப்டம்பர் 14) ஸின்சியூ விமானப் படைத் தளத்துக்கு அருகே நான்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்வதை ஏஎஃப்பி செய்தியாளர்கள் பார்த்துள்ளனர்.

சீனாவின் ராணுவப் பயிற்சி அதன் ஆயத்தநிலையை பரிசோதிக்கும் வகையில் நடைபெறுகிறது என்ற சீனாவின் கிழக்கு வட்டார ராணுவப் பேச்சாளர் கேப்டன் லி ஸி தெரிவித்தார்.தைவானின் வடக்கு, தெற்கு, கிழக்கு வட்டாரங்களில் பயற்சி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!