இருளில் மூழ்கிய சிலி – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு – அவசர நிலை அறிவிப்பு

சிலியில் நாடுமுழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு அவசரநிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகரான சாண்டியேகோ உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி ஊரடங்கும் நடப்புக்கு வந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததாகக் கூறப்பட்டது.
அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ரயில் சேவை நிறுவனம் அதன் ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது.
போக்குவரத்து விளக்குகளும் செயல்படாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மருத்துவமனைகளும் சிறைகளும் அவசரகால மின்னுற்பத்திக் கருவிகளின் துணையுடன் இயங்குகின்றன.
சிலியின் உள்துறை அமைச்சர் தாக்குதல் நடந்து அதனால் மின்தடை ஏற்பட்டதற்கான சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.