ஜெர்மனியில் தாயின் அரவணைப்பின்றி வாழும் குழந்தைகள்
ஜெர்மனி நாட்டில் தனி பெற்றோர் உடன் வளரும் குழந்தைகள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வில் தனி பெற்றோர் உடன் வளரும் குழந்தைகள் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து காணப்படுவதாக புள்ளி விபரம் வெளியாகயுள்ளது.
ஜெர்மனியில் தந்தையாரின் தனி அரவணைப்பில் வளருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியள்ளது.
கடந்த 10 வருடங்களில் தனியே தந்தையாருடன் மட்டும் வாழுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை 15 சதவீதமாக் அதிகரித்துள்ளது.
அதாவது 2012 ஆம் ஆண்டு இந்த தொகையானது 66600 ஆக காணப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இந்த தொகையானது 2 லட்சத்து 30 ஆயிரமாக உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழுகின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து.
கடந்த சில ஆண்டுகளில் இது 10 சதவீதமாக குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.