இலங்கையில் பாரிய ஆபத்தில் சிக்கும் குழந்தைகள் – கழுகைபோல் காத்திருக்கும் கும்பல்!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 28 குழந்தைகளும் 118 பெண்களும் ஆன்லைன் ஏமாற்றுதல் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள் சைபர்ஸ்பேஸ் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக காவல் துறை ஊடக செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அந்த ஆண்டில் 375 பெண்களும் இதற்கு பலியாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 114 பேர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.





