இலங்கையில் சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரிப்பு

இலங்கையில் சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாகச் சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதன் பரவல் தீவிரமடைந்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தற்போது டெங்கு நோய் பரவலும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவானோர் சிக்குன்குன்யாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கர்ப்பிணி தாயொருவர் சிக்குன்குன்யா நோயினால் பாதிக்கப்படுவராயின் அவர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
வயிற்றிலுள்ள சிசு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்
(Visited 13 times, 1 visits today)