சிக்குன் குனியா இலங்கையின் ஏனைய பகுதிகளிற்கும் பரவும் அபாயம் – சுகாதார பிரிவு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளிற்கு சிக்குன் குனியா பரவும் ஆபத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சிக்குன்குனியா தற்போது கொழும்புமாவட்டத்தில் கடுவெல பத்தரமுல்ல போன்ற பகுதிகளில் காணப்படுவதாக தெரிவித்துள்ள தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா,கம்பஹா மாவட்டத்திலும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2006,முதல் 2008 வரை சிக்குன்குனியா தொற்று காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் காய்ச்சல், உடல்வலி , மற்றும் வீக்கத்துடன் கூடிய மூட்டு வலி ஆகியவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாகும்,என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் சில நாட்களில் குணமடைந்தாலும்,சிலர் நீண்ட நாட்களிற்கு மூட்டு வலியை அனுபவிக்ககூடும் என அவர்தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் நாள்பட்ட உடல்நலக்குறைபாடுகள் உடையவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.