முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு காரணம் கூறிய தோனி

நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால்,சென்னை அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
இதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதில், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் ஆக, வெற்றி பெற 1 ரன் மட்டுமே தேவை என்ற நேரத்தில் கடைசி ஓவரில் சூர்யான்ஸ் ஷெட்ஜ் விக்கெட்டை பறிகொடுத்தார்.
19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி பஞ்சாப் அணி 2 பந்துகள் மீதமிருந்தபோது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு காரணம்
ஒன்றை மனதில் வைக்க வேண்டும். இந்தப் பிட்ச்சில் 190 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் கடைசி ஓவரில் 4 பந்துகளை ஆடவே இல்லை. அதேபோல் அதற்கு முந்தைய ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தோம் 19-வது ஓவரில் ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்டுகளை இழந்தோம். இந்த 7 பந்துகள் என்பது டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கூறியுள்ளார்.
பறிபோன பிளே ஆஃப் சுற்று
ஐபிஎல் 2025 சீசனில் இருந்து முதல் அணியாக சென்னை அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்த சீசனில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறுவதும் இதுவே முதல் முறையாகும். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை, 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 2வது ஆண்டாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுகிறது.
மோசமான சாதனை
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மோசமான சாதனைகளைப் படைத்துள்ளது. முதல்முறையாக தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி. இந்த சீசனில் மட்டுமே அதிக தோல்விகள் . பஞ்சாப் அணி உடனான கடந்த 8 ஆட்டங்களில் 7-ல்சி எஸ்கே தோல்வியடைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி 5 முறை