சென்னை சாம்சங் ஆலையில் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரி வேலைநிறுத்தம்
சென்னையில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் உற்பத்தி பாதித்தது என்று ஒரு தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மிகப்பெரிய தொழிற்சங்கம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் அதிக ஊதியம் மற்றும் போனஸ் கோரி நான்கு நாள் வேலைநிறுத்தம் நடத்தியதை அடுத்து இந்த வேலைநிறுத்தம் வந்துள்ளது.
சாம்சங் நிறுவனம், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களைத் தயாரிக்கும் ஆலையில் 2,000க்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
பல தொழிலாளர்கள் வேலைக்கு வராததால், தொழிற்சாலையில் தினசரி உற்பத்தியில் பாதியளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார் , நிறுவன சீருடை அணிந்த பலர் ஆலைக்கு வெளியே அமர்ந்து ஊதிய உயர்வு மற்றும் சிறந்த வேலை நேரத்தைக் கோரினர்: என்று தெரிவித்தார்.
சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சலில், “தொழிலாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்கும் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என தெரிவித்தார்.