சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்.
காக்கிநாடாவில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய சர்க்கார் எக்ஸ்பிரஸ் அறையிலானது வழக்கம் போல் இன்று அதிகாலை 2.37 AM மணிக்கு புறப்பட்டது. ஆனால் வழக்கம் போல் கும்மிடிப்பூண்டியில் 4.10 AM மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விரைவு ரயில் ஆனது 30 நிமிடங்கள் தாமதமாக 4.40 AM மணிக்கு வந்தடைந்தது.
இந்த அறிவுரைகளில் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெதுவாக வந்தடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ற அந்த ரயிலானது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு அடைந்து மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே அநிறுத்தப்பட்டது இதனால் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் பத்தாமதமாக சென்றது.
இதனால் வழக்கம் போல் வேலைக்கும் பள்ளி கல்லூரிக்கும் செல்லக்கூடியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் மேலும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட நடைமேடையில் நிறுத்தப்பட்ட ரயில்கள் ரயில்வே நிர்வாகத்தால் மாற்றி மாற்றி அறிவித்ததால் பயணிகள் அங்கும் இங்கு மறைந்து பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.