பருத்திப் பஞ்சைப் பனி என ஏமாற்றிய சீனா – கோபமடைந்த சுற்றுலா பயணிகள்

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் செங்டூ பனி கிராமம் போலிப் பனியைப் பயன்படுத்தி சுற்றுப்பயணிகளை ஏமாற்றியதற்காக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொாடர்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கிராமம் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமானது.
பருத்திப் பஞ்சைப் பயன்படுத்தி கிராமத்தில் பனி இருப்பதைப் போன்ற தோற்றம் அமைக்கப்பட்டது. அதைப் பற்றி சுற்றுப்பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டன.
சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருந்ததால் நினைத்ததைப் போல பனி படரவில்லை என்று கிராமத்தின் அதிகாரபூர்வ Wechat கணக்கில் பதிவிடப்பட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாகச் சீனாவில் நீண்ட நாள்களுக்கு அதிக சூடாக இருக்கிறது அல்லது இடைவிடாமல் கனத்த மழைபெய்கிறது.
கிராமத்தில் பனி இருப்பதைப் போல சுற்றுப்பயணிகளை நம்ப வைக்கப் பருத்திப் பஞ்சு பயன்படுத்தப்பட்டது. ஆனால் சுற்றுப்பயணிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டனர்.
சுற்றுப்பயணிகளின் கருத்துகளுக்கு ஏற்ப கிராமம் போலிப் பனியை அகற்றியது. தற்போது அந்தச் சுற்றுலாத்தலம் மூடப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்புக் கேட்ட கிராமம், அவர்களது பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறியது.