செம்மணிப் புதைகுழி – சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற தயாராகும் அரசாங்கம்
செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக, சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைக்குச் சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர்,
செம்மணிப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்குச் சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை.
அத்துடன், எமது நாட்டுப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். உண்மையை கண்டறிவதே எமது முக்கிய நோக்கம். அதற்குத் தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி நிச்சயம் பெறப்படும்” என்று குறிப்பிட்டார்.





