சீஸ்களால் ஆபத்து! பிரான்ஸில் 2 பேர் மரணம் – 21 பேர் பாதிப்பு – ஜெர்மனியில் மீளக்கோரல்
ஜெர்மனி – பிரான்ஸில் விற்பனையான மூன்று பிரெஞ்சு சீஸ் வகைகள் லிஸ்டீரியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸில் சீஸ் உட்கொண்ட இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் லிஸ்டீரியோசிஸ் என்ற தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Camembert de caractère Vieux Porche, Camembert Charles VII, Bûchette de Chèvre Vieux Porche ஆகியவைகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பிரான்ஸில் உள்ள S.E. Chavegrand நிறுவனம் தயாரித்தவை. Listeria monocytogenes என்ற பாக்டீரியாவால் மாசுபட்டுள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
Listeriosis பொதுவாக பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் அடங்கும். சில நேரங்களில் அறிகுறிகள் தோன்ற எட்டு வாரங்கள் வரை ஆகலாம்.
இந்த சீஸ்களை வாங்கியவர்கள், பக்கெட் சீரியல் எண்களை சரிபார்த்து, பாதிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பொருட்களை கடைக்கு திருப்பித் தரலாம்.





