இலங்கை

குறைந்த செலவில் தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  எயார் ஏசியா விமானமான AIQ-140  தனது முதலாவது பயணத்தை Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து இன்று இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இது ஏ-320 ஏர்பஸ் வகை விமானமாகும். அந்த விமானத்தில் 134 பயணிகளும் 07 பணியாளர்களும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், 174 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லவுள்ளனர்.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

ஒரு முறை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து செல்வதற்கு INR 50,000  மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்