சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சி – தீவிர ஆய்வு நடத்தும் அதிகாரிகள்
சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சியைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
CREATE அமைப்பு அந்த திட்டங்களையும் நேற்று தொடங்கியது.பல நாடுகளையும் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் கூட்டாக ஆய்வில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் உணவு மேலும் சுவையாக இருப்பதோடு அதிகச் சத்துள்ளதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.
புதிய தேசிய ஆய்வின்படி உற்பத்தியின்போது நுண்கிருமிகள் எளிதில் கண்டறியப்படும். அதனால் இறைச்சி வீணாவது குறைக்கப்படும். செலவு குறையும். மற்றொரு தேசிய ஆய்வு இயந்திரக் கருவிகளோடு சேர்ந்து செயல்படுவதை ஆராய்கிறது.
(Visited 16 times, 1 visits today)