ChatGPTயின் அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை!
உலகில் அதிகம் பேசப்படும் ChatGPT செயலி Apple நிறுவனத்தின் App Store சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்கள் பலர் போகும் இடமெல்லாம் ChatGPTயைப் பயன்படுத்த விரும்புவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளரான OpenAI நிறுவனம் இந்த விடயத்தை கூறியது. அதனால் அது செயலி-வழி, திறன்பேசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விளம்பரங்கள், பல்வேறு பதில்கள் ஆகியவையின்றி கேள்விகளுக்கு நேரடியாக விடைகளைப் பெற அது உதவும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலவசமாக வழங்கப்படும் அந்த ChatGPT செயலி Google நிறுவனத்தின் தேடல் சேவைக்குக் கடும் போட்டியாகக் கருதப்படுகின்றது.
செயலி முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.
Android திறன்பேசிகளிலும் அது கூடியவிரைவில் வழங்கப்படும்.