நைஜீரியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டு நிகழ்வு : நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!
நைஜீரியாவில் இரண்டு கிறிஸ்துமஸ் தொண்டு நிகழ்வுகளின் போது நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 32 ஆக அதிகரித்துள்ளது என்று போலீசார் இன்று (22.12) தெரிவித்தனர்.
இறந்தவர்களில் 22 பேர் தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அங்கு உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்திருந்தபோது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் அபுஜாவில் மேலும் பத்து பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது, அங்கு ஒரு தேவாலயம் உணவு மற்றும் ஆடை பொருட்களை விநியோகிக்க ஒரு தொண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





